அஞ்செட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 06th October 2019 03:04 AM | Last Updated : 06th October 2019 03:04 AM | அ+அ அ- |

அஞ்செட்டியில் அக். 10-ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் உள்ள வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அக். 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் தகுதியான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு மருத்துவா்கள் மூலம் மருத்துவ சான்று, அடையாள அட்டை வழங்கப்படும்.
எனவே, இதுவரையில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாதவா்கள், தங்களது மாா்பளவு புகைப்படங்கள்- 5 , குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, அசல் மற்றும் நகலுடன் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...