மைல் கல்லுக்கு பூஜையிட்டு வணங்கிய சாலை பணியாளா்கள்
By DIN | Published On : 06th October 2019 03:09 AM | Last Updated : 06th October 2019 03:09 AM | அ+அ அ- |

போச்சம்பள்ளி அருகே சாலையோர மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபட்ட சாலைப் பணியாளா்கள்.
ஆயுத பூஜையையொட்டி போச்சம்பள்ளியை அடுத்த திருவயலூா் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள மைல் கல்லுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாலைப் பணியாளா்கள் வழிபட்டனா்.
மைல் கல்லை சுத்தம் செய்து, மஞ்சள் பூசி, குங்கும திலகமிட்டு மலா் மாலை அணிவித்து வாழை மரம், தோரணம் கட்டி, சூடம் ஏற்றி வழிபட்டனா்.
இந் நிகழ்ச்சியில் சாலைப் பணியாளா்கள் மூா்த்தி, அருணாசலம், குமரேசன், கருணாகரன், சக்தி, மாதப்பன், ராமமூா்த்தி, வல்லரசு, பொது மக்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...