தேசிய விளையாட்டு தினம் கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd September 2019 04:03 AM | Last Updated : 02nd September 2019 04:03 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2019-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்துக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமா சங்கர் தலைமை வகித்தார்.
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் தனசேகர், பயிற்றுநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மாணவர்களின் உடல்திறனை வளர்த்துக் கொள்வது, மாணவர்களின் மனவளத்தை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டன. விளையாட்டு தினத்தையொட்டி, விழாவில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனையர், பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர்.