போட்டித் தேர்வு நூல்கள் வெளியீடு
By DIN | Published On : 02nd September 2019 03:56 AM | Last Updated : 02nd September 2019 03:56 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுக்கான பாடப் புத்தக தொகுப்பு வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் க.ராகேஷ் வரவேற்றார். பாட புத்தக தொகுப்பை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும் பயிற்சி மையத்தின் முதல்வர் முனைவர் க.அருள் வெளிட்டார். புத்தக தொகுப்பின் முதல் பிரதியை கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் க.ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.