ஒசூர் கோட்டத்தில் நாளை மின்நிறுத்தம்
By DIN | Published On : 11th September 2019 10:22 AM | Last Updated : 11th September 2019 10:22 AM | அ+அ அ- |

ஒசூர் கோட்டத்தில் வியாழக்கிழமை (செப்.12) மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஒசூர் மின் நகர், சூசூவாடி, சிப்காட் பகுதி 2 மற்றும் ஒசூர் துணை மின் நிலையங்கள், உத்தனப்பள்ளி, கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலும் வியாழக்கிழமை (செப்.12) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.