டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 11th September 2019 10:19 AM | Last Updated : 11th September 2019 10:19 AM | அ+அ அ- |

பர்கூரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பர்கூரில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியா ராஜ், தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், முதுநிலை மருத்துவ அலுவலர் சற்குணம், ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ அலுவலர் உதயசூரியன் உள்ளிடோர் பங்கேற்றனர்.
பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தொடங்கிய இந்த பேரணி, சென்னைப் பிரிவு சாலை, ஜெகதேவி சாலை, சின்ன பர்கூர், டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இந்தப் பேரணியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் மழை நீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் புழுக்கள் உருவாகாத வகையில் மேல்மூடி அமைப்பதோடு, சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு, வைரஸ் நோய்கள் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.