மக்காச்சோளப் பயிர் சாகுபடி: வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
By DIN | Published On : 11th September 2019 10:22 AM | Last Updated : 11th September 2019 10:22 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையை அடுத்த வளத்தானூர் கிராமத்தில் சாகுபடிசெய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர் பரப்பை வேளாண்மை இணை இயக்குநர் செ.கலைவாணி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) அறிவழகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளைச் சந்தித்து ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை எடுத்துக் கூறினர். அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு இடுதல், 25 ஆம் நாள் வேப்ப எண்ணெய் தெளித்தல், இனக்கவர்ச்சிப் பொறிவைத்தல், எமா மெக்டின் பென்சோயேட், ஸ்பைனிடோரம் தெளிப்பு, பெவேரியா பேசியானா பயன்பாடு ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.
மேலும், சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினர். இதில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) சு.பிரபாவதி, வேளாண்மை உதவிஅலுவலர் பி.தமிழ்வாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.