ஊத்தங்கரையில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீர் வழங்கல்

ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஆர்கே ஓட்டல் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஆர்கே ஓட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீர் வழங்கல்
ஊத்தங்கரையில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீர் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஆர்கே ஓட்டல் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஆர்கே ஓட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமை வகித்தார். முன்னாள் அரிமா சங்கத் தலைவர் ஆர் கே ராஜா முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் கரோனோ நோய் தீவிரமடைந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று இல்லாத பச்சை மண்டலமாக இருந்த நிலையில் தற்பொது கரோனோ நோய் பாதிக்கப்பட்டவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டு 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 

ஊத்தங்கரை பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி சேலம் சாலையில் உள்ள ஆர்கே. ஓட்டலில் பொதுமக்கள் கரோனோ நோய் தடுக்கும் பொருட்டு இலவச கபசுர குடிநீர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ஆர்கே ஓட்டல் அரிமா சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. முன்னாள் அரிமா சங்கத் தலைவர் ஆர் கே ராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து துவக்கி வைத்தார். 

இதில் பொது மக்கள் அன்றாடம் இங்கு வந்து கபசுர நீர் குடிக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர்  மருத்துவர் பத்மாநாபன், நேசம் தொண்டு நிறுவன  குணசேகரன், பொருலாளர் ரஜினி சங்கர்,
தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், துணை செயலாளர் செல்வம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com