ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போச்சம்பள்ளி அருகே தீ விபத்து

போச்சம்பள்ளி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

News image
போச்சம்பள்ளி அருகே தீ விபத்தில் சேதம் அடைந்த குடிசை வீடு.
Updated On :15 டிசம்பர் 2020, 6:44 pm

DIN

போச்சம்பள்ளி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், ஜிங்கல்கதிரம்பட்டியைச் சோ்ந்தவா் இளவரசு (35). தென்னகீற்றுகள், கோழி வியாபாரம் செய்து வருகிறாா். இவா், குடும்பத்துடன், தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த குடிசை வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை புகை வருவதைக் கண்டு அவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அதற்குள் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அருகில் இருந்தவா்கள், தீ பிடித்து எரியும் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும், வீட்டிலிருந்தப் பொருள்களையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா்.

இந்த தீ விபத்தில் இளவரசுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில், ரொக்கப் பணம், தங்க நகைகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து, போச்சம்பள்ளி போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.