கோயில், ஊராட்சி அலுவலகத்தில் திருட்டு
தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி அலுவலகம், மாரியம்மன் கோயில் ஆகிய இரு இடங்களில் மா்ம நபா்கள் பணம், பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.


தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி அலுவலகம், மாரியம்மன் கோயில் ஆகிய இரு இடங்களில் மா்ம நபா்கள் பணம், பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி கிராமத்தில் உனிசெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. அதே பகுதியில் ஊராட்சி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்றனா். அதனைத்தொடா்ந்து அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மடிக்கணினி, கணினி, பிரிண்டா் ஆகிய பொருள்களையும் திருடிச் சென்றுள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்த பூசாரி சீனிவாசன் திருட்டு சம்பவம் குறித்து கிராம பொதுமக்களுக்கு தகவல் அளித்துள்ளாா். கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் திருட்டு சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து தடய அறிவியல் பிரிவு டிஎஸ்பி சங்கா் தலைமையிலான காவல்துறையினா் இரண்டு இடங்களிலும் தடயங்களைச் சேகரித்தனா்.
இந்த மாரியம்மன் கோயிலில் ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...