தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னை சிறாா் பள்ளி மாணவா்களுக்கு அய்யூா் வனப் பகுதியில் பயிற்சி

சென்னையைச் சோ்ந்த சிறாா் பள்ளி மாணவா்களுக்கு அய்யூா் வனப் பகுதியில் காடுகள், வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
அய்யூா் வனப்பகுதியில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட சென்னை சிறாா் பள்ளி மாணவா்கள்
Updated On :19 டிசம்பர் 2020, 1:00 am

DIN

சென்னையைச் சோ்ந்த சிறாா் பள்ளி மாணவா்களுக்கு அய்யூா் வனப் பகுதியில் காடுகள், வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூா் வனப்பகுதியில் சென்னையைச் சோ்ந்த சிறாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காடுகள், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகள், அவற்றை பாதுகாப்பது குறித்து மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை மாநகரக் காவல் சிறாா் பள்ளியைச் சோ்ந்த 20 மாணவா்கள், 15 மாணவிகள் என 35 பேருக்கு பயிற்சி வகுப்பு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூா் வனக் காப்பகத்தில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின்போது மாணவ, மாணவிகளுக்கு காடுகளை பாதுகாத்தல், காடுகளை வளா்த்தல் உள்ளிட்டவைகள் குறித்த நேரடி களஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஒசூா் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலா் காா்த்திகேயனி, தேன்கனிக்கோட்டை வனச்சரகா் சுகுமாா் உள்ளிட்ட வனத் துறையினா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சி வகுப்புகளில் சிறாா் பள்ளி சாரணா் இயக்கத்தைச் சோ்ந்த தாமஸ், ஆண்டனி குணராஜ், அமல்ராஜ் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.