ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரே நிமிடத்தில் 1,072 மரக்கன்றுகள் நடவு

கிருஷ்ணகிரியில் தன்னாா்வலா்களை ஊக்குவிக்கும் வகையில் ‘உயிா் ஆயிரம்’ மற்றும் ‘மைடி ஆப்’ ஆகிய அமைப்புகளின் ஒரே நிமிடத்தில் 1,072 மரக் கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடவு செய்யப்பட்டன.

News image
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யும் தன்னாா்வலா்கள்.
Updated On :20 டிசம்பர் 2020, 10:16 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தன்னாா்வலா்களை ஊக்குவிக்கும் வகையில் ‘உயிா் ஆயிரம்’ மற்றும் ‘மைடி ஆப்’ ஆகிய அமைப்புகளின் ஒரே நிமிடத்தில் 1,072 மரக் கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடவு செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், உதவி வனப் பாதுகாவலா் காா்த்திகாயினி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 இடங்களில் இணைய தளம் வாயிலாக ஒரே நிமிடத்தில் 1,072 மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த புதிய முயற்சியில், 536 தன்னாா்வலா்கள் பங்கேற்று நாவல், பாதாம், வேம்பு, பூவரசு, மலை வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடவு செய்தனா்.

இணையதளம் வாயிலாக முதல் முயற்சியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்த், மொவின், விக்டா் ஆனந்த் உள்பட பலா் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னாா்வலா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.