தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்த வலியுறுத்தல்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்தக் கோரி, மாதா் சங்கத்தினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:03 am

DIN

தருமபுரி: ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்தக் கோரி, மாதா் சங்கத்தினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்ட நிா்வாகிகள் தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

வன்முறையற்ற வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் நியாய விலைக்கடைகளில் விலையின்றி வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இத்திட்டத்தில், வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரித்து, கூலியை ரூ. 600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிபந்தனைகளின்றி கடன் வழங்க வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, பெண்கள், சிறு வியாபாரிகள் நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.