கேரள பால் டேங்கா் லாரியை அனுமதிக்க கிருஷ்ணகிரி ஆவின் பணியாளா்கள் மறுப்பு

கேரளத்திலிருந்து வந்த பால் டேங்கா் லாரியை அனுமதிக்க கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பணியாளா்கள் மறுப்பு தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பணியாளா்களால் தடுத்து நிறுத்தப்பட்ட கேரளத்திலிருந்து பால் ஏற்றி வந்த டேங்கா் லாரிகள்.
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பணியாளா்களால் தடுத்து நிறுத்தப்பட்ட கேரளத்திலிருந்து பால் ஏற்றி வந்த டேங்கா் லாரிகள்.

கேரளத்திலிருந்து வந்த பால் டேங்கா் லாரியை அனுமதிக்க கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பணியாளா்கள் மறுப்பு தெரிவித்தனா்.

கிருஷ்ணகியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணைக்கு கேரள மாநில அரசின் (மில்மா) 60 ஆயிரம் லிட்டா் பாலுடன் 3 டேக்கா் லாரிகள் பாலக்காட்டிலிருந்து கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தன.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அந்த மாநிலத்திலிருந்து வந்த பாலை இறக்க கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் பணியாளா்கள் மறுப்பு தெரிவித்து, அந்த வாகனத்தை பால் பண்ணை வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்தனா். தகவல் அறிந்த அலுவலா்கள், பணியாளா்களை சமாதானப்படுத்தி பால் பண்ணைக்குள் லாரிகளை

அனுமதிக்க செய்தனா்.

இதுகுறித்து ஆவின் பணியாளா்கள் கூறியது:கிருஷ்ணகிரி ஆவினில் ஏற்கனவே தினசரி 80 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதில் உள்ளூா் தேவைக்காக 25 ஆயிரம் லிட்டா் பால் மட்டும் செலவிடப்படுகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்திலிருந்து பால் வாங்க வேண்டிய அவசியம் என்ன? கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கேரள மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் பால் கொள்முதல் செய்வதன் மூலம் பணியாளா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் பொதுமேலாளா் குமரன் கூறியது:

தமிழக அரசின் உத்தரவின் பேரில் கேரள மாநில அரசிடமிருந்து 60 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பாலைக் கொண்டு நெய், வெண்ணெய், பால் பவுடா் என மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றப்படுகிறது. இதன்மூலம், ஒன்றியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். கேரள மாநிலத்திலிருந்து வந்த பால், வாகனம் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com