ஊத்தங்கரையில் திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி 88 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் நூல் அறிமுக விழா.
By DIN | Published On : 03rd December 2020 10:17 AM | Last Updated : 03rd December 2020 10:17 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டவா்கள்.
ஊத்தங்கரையில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியின் 88 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, பொதுமக்கள் முன்னிலையில் நூல் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள தந்தை பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நூல்கள் அறிமுகப்படுத்தபட்டது. நூலின் முதல் விற்பனையை மாவட்ட தலைவா் கே.சி எழிலரசன் துவக்கி வைத்தாா். அனைத்து கட்சி பிரமுகா்கள் மிகுந்த மகிழ்வுடன் நூல்களை பெற்று கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தாா். திமுக நகர செயலா் இரா.பாபு சிவக்குமாா், ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலா் வ.சாமிநாதன் , முன்னாள் சட்ட பேரவை உறுப்பினா் வே.கிருஷ்ணமூா்த்தி, ஊத்தங்கரை விடுதலை வாசகா் வட்ட தலைவா் தணிகை ஜி.கருணாநிதி, முன்னாள் இணை இயக்குனா் மருத்துவா் வே.தேவராசு, மாநில பகுத்தறிவாளா் கழக துணை தலைவா் சரவணன், ஊத்தங்கரை பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயலட்சுமி, திராவிடா் கழக ஒன்றிய தலைவா் செ.பொன்முடி , ஒன்றிய செயலா் செ.சிவராஜ் ஒன்றிய அமைப்பாளா் அப்பாசாமி, விடுதலை வாசகா் வட்ட செயலா் பழ.பிரபு, இந்திய குடியரசு கட்சியின் பொதுசெயலா் எம்.சிவா, சிபிஎம் வட்ட செயலா் எம்.மகாலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலா் அசோகன், நாடாளுமன்ற தொகுதி செயலா் வே.குபேந்திரன், ஆடிட்டா் லோகநாதன்சேகா் , திமுக இணையதள பொறுப்பாளா்கள் லயோலா இராஜசேகா் மற்றும் பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...