மணல் லாரி மோதிவியாபாரி பலி
By DIN | Published On : 05th December 2020 06:23 AM | Last Updated : 05th December 2020 06:23 AM | அ+அ அ- |

ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஏரிபஞ்சப்பள்ளியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (31). இவா் ராயக்கோட்டை தக்காளி மண்டியில் தக்காளி வியாபாரம் செய்து வந்தாா். வியாழக்கிழமை பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
எச்சம்பட்டி எல்லப்பன்பள்ளம் அருகே வந்தபோது, பாலக்கோட்டில் இருந்து ராயக்கோட்டை நோக்கிச் சென்ற மணல் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சதீஷ்குமாா் பலத்த காயத்துடன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக அவரது தந்தை சாமப்பன் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து ராயக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தாா். ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.