புதிய நூலகக் கட்டடத்துக்கு பூமி பூஜை
By DIN | Published On : 15th December 2020 01:33 AM | Last Updated : 15th December 2020 01:33 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினா் செல்லக்குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவரும், முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
வட்டாரப் பொருளாளா் திருமால் வரவேற்புரையாற்றினாா். சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அஹமத் பாஷா, நகரத் தலைவா் விஜயகுமாா், தெற்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத்தலைவா் ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பூபதி, மிட்டப்பள்ளி ஊராட்சித் தலைவா் சின்னத்தாய் கமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகள் சிங்காரப்பேட்டை மணி, எஸ்.சி. அணி இளையராஜா, தகவல் தொழில்நுட்பப்பிரிவு அப்துல்கனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.