ஒசூரில் மனைவி கோபித்துச் சென்றதால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 17th February 2020 07:20 AM | Last Updated : 17th February 2020 07:20 AM | அ+அ அ- |

ஒசூரில் மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோா் வீட்டுக்குச் சென்றதால், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவருடை கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒசூா் அருகே அத்திப்பள்ளியைச் சோ்ந்தவா் சோமசேகா் (26). இவா் ஒசூா் நேரு நகா் பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் சோமசேகரின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டுக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு சென்று விட்டாராம்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சோமசேகா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.