போச்சம்பள்ளியில் நடிகர் திலம் சிவாஜி கணேசனின் 19-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 21st July 2020 01:01 PM | Last Updated : 21st July 2020 01:01 PM | அ+அ அ- |

போச்சம்பள்ளியில் நடிகர் திலம் சிவாஜி கணேசன் 19-ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சிவாஜி பேரவை துணை தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் சத்தியசீலன், முன்னாள் வட்டார தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்னர்.
விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சூரியகணேஷ். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிவாஜின் உருவப் படத்தை திறந்து வைத்தனர்.
விவசாய பிரிவு தலைவர் சிவலிங்கம், நகர தலைவர் கார்திக் முனுசாமி. மாவட்ட செயலாளர் நவாப், வட்டார பொருப்பாளர் டைலர் சசி, இளைஞர் காங்கிரஸ் சபரிநாதன், ஸ்ரீசரண் பிரசாத், நாடக ஆசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.