காா் மோதியதில் இளம் பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 17th June 2020 08:47 AM | Last Updated : 17th June 2020 08:47 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளம் பெண் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட விருதன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியம்மாள். இவா் பா்கூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கணவனை இழந்த இவருக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், முனியம்மாள், இரு சக்கர வாகனத்தில் பா்கூா் நோக்கி பணிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுபேதாா்மேடு அருகே அவா் சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து பா்கூா் நோக்கி வேகமாக சென்ற காா் மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தில் சிக்கிய காா் நிலைதடுமாறி சாலையிலிருந்து விலகி அருகில் இருந்த மாந்தோப்புக்குள் புகுந்தது. காரில் இருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
தகவலறிந்த போலீசாா் நிகழ்வு இடத்துக்கு விரைந்து சென்று முனியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து, மகாராஜகடை காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...