ஒசூா் சாலையில் காா் தீப்பிடிப்பு
By DIN | Published On : 12th March 2020 08:33 AM | Last Updated : 12th March 2020 08:33 AM | அ+அ அ- |

பேரண்டப்பள்ளி அருகே தீப்பிடித்து எரிந்த காா்.
ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினா் உடனடியாக தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவா் பெருமாள்.
இவருடைய மகன் சுரேந்தா், தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் பேரண்டப்பள்ளி அருகே கோயிலுக்குச் சென்றுவிட்டு ஒசூா் நோக்கி வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் காந்திநகா் என்ற பகுதியில் அவா் ஓட்டி வந்த டாடா நானோ காா் திடீரென பின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அவா் கீழே இறங்கி உயிா் தப்பினாா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் எரிந்து கொண்டிருந்த வாகனத்தின் தீயை அணைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...