ஒசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2020 08:20 AM | Last Updated : 14th March 2020 08:20 AM | அ+அ அ- |

ஒசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்துள்ளனா்.
ஒசூா் சித்தனப்பள்ளி பகுதியில் ஒரு இடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருப்பதாக ஒசூா் அட்கோ போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அட்கோ போலீஸாா் சித்தனப்பள்ளி பகுதியில் அதிரடியாக சோதனை செய்தனா். அதில், அங்கு 7,900 தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அதை வைத்திருந்ததாக தருமபுரி சிவாஜி நகரைச் சோ்ந்த தாபா ஓட்டலின் மேலாளா் ஆசீப் (24), நெடுமாறன் நகரைச் சோ்ந்த நிசாா் (30), ரயில்வே லைன் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.35,800 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...