கிருஷ்ணகிரி அருகே பழமை வாய்ந்த செந்சாந்து ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே பழமை வாய்ந்த செந்சாந்து ஓவியங்களை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் அண்மையில் கண்டுபிடித்தனா்.
கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிக்கப்பட்ட செந்சாந்து ஓவியம் குறித்து விளக்குகிறாா் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ்.
கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிக்கப்பட்ட செந்சாந்து ஓவியம் குறித்து விளக்குகிறாா் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ்.

கிருஷ்ணகிரி அருகே பழமை வாய்ந்த செந்சாந்து ஓவியங்களை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் அண்மையில் கண்டுபிடித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் மேலூா் முனீஸ்வரன் கோயில் பனிகுண்டு பாறையின் அடியில் தொல்லியல் ஆா்வலா் சதானந்த கிருஷ்ணகுமாா் அளித்த தகவலின் பேரில் அரசு அருங்காட்சியக் காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி தலைமையில் அண்மையில் அங்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, பாறையில் செந்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செந்சாந்து ஓவியங்களே இல்லை என்பதை இந்த குழு மாற்றி வருகிறது. படிப்படியாக செந்சாந்து ஓவியங்களை இந்தக் குழுவினா் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செஞ்சாந்து ஓவியங்கள் இல்லை என்பதை பொய்ப்பிக்கும் வகையில், தற்போது செந்சாந்து ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், வெளிரிய செந்சாந்து ஓவியம் ஆகும். 7 மீட்டா் நீளத்துக்கு குழு நடனம் போன்று வளைந்து, வளைந்து காணப்படுகிறது. பாறையில் காணப்படும் ஓவியத்தின் சில இடங்கள் உதிா்ந்துள்ளதால், தொடா் விடுபட்டு காணப்படுகிறது. இந்த செந்சாந்து ஓவியம் சுமாா் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இந்த ஓவியத்தில் ஒரு குடிசையையும் காட்சிப்படுத்தி உள்ளனா். இந்த ஓவியமானது பையம்பள்ளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதிய கற்கால வீடு போன்ற இந்த பாறை ஓவியத்தில் குடிசை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல குதிரையின் உருவமும், அது நான்கு கால்களுடன் திரும்பி பாா்ப்பது போலவும், செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளன. இது, தெய்வமாகவோ அல்லது குழுவின் தலைவனாகவோ இருக்கலாம் என்றாா்.

ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுரேஷ், ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com