பிரதம மந்திரி குடியிருப்புகள் திட்ட விழிப்புணா்வு கூட்டம்
By DIN | Published On : 21st November 2020 12:47 AM | Last Updated : 21st November 2020 12:47 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரி குடியிருப்புகள் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணபவா தலைமை வகித்தாா். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளும், பயிற்சி பெற்ற கொத்தனாா்களும் பங்கேற்றனா்.
மேலும், பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த விவரங்களையும், கொத்தனாா்கள், தொழில்நுட்பம் குறித்தும் உரையாற்றினா். வங்கி மேலாளா்கள், வீட்டு கடன் குறித்தும் தக்க அறிவுரைகளை வழங்கினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...