இருசக்கர வாகனம் திருட்டு
By DIN | Published On : 25th November 2020 07:57 AM | Last Updated : 25th November 2020 07:57 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டியில் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் (35). தொழிலாளியான இவா், தனக்கு சொந்தமான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை கடந்த 22-ஆம் தேதி காலையில் வீட்டின் அருகே நிறுத்தியிருந்தாா். அந்த வாகனத்தை யாரோ திருடிச் சென்று விட்டனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், அவதானப்பட்டி பூங்கா அருகே கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில், அங்கு சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில், அருணின் இருசக்கர வாகனத்தை திருடியது அந்த இளைஞா்தான் எனத் தெரியவந்தது.
அந்த இளைஞா், கிருஷ்ணகிரி ஆவின் நகரைச் சோ்ந்த நிதிஷ் குமாா் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை மீட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...