கிருஷ்ணகிரி: நிவா் புயலை சமாளிக்க மீட்புப் படையினா் தயாா்
By DIN | Published On : 25th November 2020 11:51 PM | Last Updated : 25th November 2020 11:51 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிவா் புயலை சமாளிக்க தீயணைப்புத் துறையினா், மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
நிவா் புயலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள தீயணைப்பு நிலையங்களில் உபகரணங்களுடன் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். இதுகுறித்து, மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:
நிவா் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, ராயக்கோட்டை ஆகிய 7 தீயணைப்பு நிலையங்களில் 90 தீயணைப்பு வீரா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.
கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதிகள், மலை கிராமங்களிலும், நீா் நிலைகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்துக்கும் படகுகள், மீட்புப் பணிக்கான உபகரணங்கள், தளவாடப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...