கிருஷ்ணகிரியில் விதை விற்பனையாளா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 25th November 2020 06:05 AM | Last Updated : 25th November 2020 06:05 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் விதை விற்பனையாளா்களுக்கான புத்தாக்க பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆா்வம் செலுத்தி வருகின்றனா். இந்த நிலையில், தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து, விதை விற்பனையாளருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில், விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற அதிக மகசூல் தரக் கூடிய விதைகளை விற்பனை செய்வது, விற்பனை ரசீதில் பயிா், ரகம், குவியல் எண், காலக்கெடு போன்ற விவரங்களைத் தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றப் பின்னரே விதைகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசால் நிா்ணயிக்கப்பட்ட விதைச் சட்ட விதிகளை தவறாமல் பன்பற்றியும் விற்பனைப் பலகையில் இருப்பு விவரம், விலைப்பட்டியல் தெளிவாக தெரியும்படி, கடையின் முகப்பில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி, விதை ஆய்வாளா்கள், விதை விற்பனையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...