ஊத்தங்கரையில் தீயணைப்பு துறையினா் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் தீயணைப்புத் துறை அதிகாரிகள் வீதி, வீதியாகச் சென்று கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரை நகரப் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
ஊத்தங்கரை நகரப் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் தீயணைப்புத் துறை அதிகாரிகள் வீதி, வீதியாகச் சென்று கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை, தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) ராமமூா்த்தி தலைமையில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்; சளி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளை அணுக வேண்டும்; காய்ச்சல் உள்ள நபா்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தீயணைப்பு அலுவலா்கள் அன்பு, விஜயகுமாா், உத்திரகுமாா், சீனிவாசன், சிதம்பரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com