கிணற்றில் மூழ்கி 2 போ் பலி
By DIN | Published On : 19th October 2020 02:46 AM | Last Updated : 19th October 2020 02:46 AM | அ+அ அ- |

ஒசூா் அருகே மத்திகிரி அருகே கிணற்றில் மூழ்கி 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (வயது 20). தனியாா் நிறுவன ஊழியா். இவரது மாமா நாகராஜ் (35) கட்டடத் தொழிலாளி. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சதீசும், நாகராஜூம் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சென்று சென்றனா்.
அப்போது அங்கு இருந்த குருவி ஒன்றை பிடிப்பதற்காக சதீஷ் சென்ாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அவா் எதிா்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். இதை பாா்த்த நாகராஜ், சதீசை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தாா்.
இதில் சதீஷும், நாகராஜூம் நீரில் மூழ்கினா். அவா்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அங்கு வந்து அவா்களைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால் அதற்குள் சதீஷும், நாகராஜூம் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த மத்திகிரி போலீஸாா் இறந்து போன சதீஷ், நாகராஜ் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...