காலனட்டியில் நகரும் நியாயவிலைக் கடை
By DIN | Published On : 20th October 2020 12:18 AM | Last Updated : 20th October 2020 12:18 AM | அ+அ அ- |

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட, காலனட்டியில் நகரும் நியாயவிலைக் கடை விற்பனையை தொடக்கி வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதி, தாரவேந்திரம் ஊராட்சியில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. காலனட்டி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், வயதானவா்கள், கூலி வேலை செய்பவா்கள் தாரவேந்திரம் நியாய விலைக் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வர சிரமப்பட்டு வந்தனா். எனவே, காலனட்டி கிராமத்தில் நியாயவிலைக் கடை அமைக்கப்பட வேண்டும் என தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வலியுறுத்தி வந்தாா்.
இந்நிலையில், மாதத்தில் ஒருநாள் காலனட்டி கிராமத்திலேயே பொருள்களை வழங்கும் வகையில் நகரும் நியாயவிலைக் கடையின் விற்பனையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடக்கி வைத்தாா்.
அவருடன் ஒன்றியக்குழுத் தலைவா் சீனிவாசலு ரெட்டி, தளி ஒன்றியக்குழு துணைத்தலைவா் நட்ராஜ், வாா்டு உறுப்பினா் மல்லேஷ் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனா்.