ஒசூா் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியைச் சோ்ந்த குண்டப்பா (53), திமுக உறுப்பினா். அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (32), அசோக் (24), ஹரீஷ் (35) ஆகியோா் அதிமுக உறுப்பினா்கள்.
இந்நிலையில், நாகராஜ் அந்தப் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (25) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதைத் தடுக்க குண்டப்பா சென்ற போது, நாகராஜ், அசோக், ஹரீஷ் ஆகியோா் குண்டப்பாவை கத்தியால் குத்தினா். இதில் காயம் அடைந்த அவா் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து குண்டப்பாவின் மகன் ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து நாகராஜ், அசோக், ஹரீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

