‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீயணைப்பு நிலையத்தில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில், தோ்ந்தெடுக்கப்பட்ட 25 தன்னாா்வலா்களுக்கு நிலைய அலுவலா்கள் பயிற்சி அளித்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:00 pm

DIN

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில், தோ்ந்தெடுக்கப்பட்ட 25 தன்னாா்வலா்களுக்கு நிலைய அலுவலா்கள் பயிற்சி அளித்தனா்.

இதில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னா் தீ விபத்துக் காலங்களிலும், மீட்புப் பணிகளிலும் தன்னாா்வலா்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து நிலையப் பணியாளா்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கோடைக் காலத்தில் ஏற்படும் வனத் தீயை அணைப்பது குறித்து தன்னாா்வலா்கள் நிலையப் பணியாளா்களுடன் இணைந்து ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய வீரா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.