தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

‘ஒசூரில் பல திட்டங்களை அதிமுகதான் கொண்டுவந்தது’

அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட வாக்கு சேகரிப்பின்போது பிரசாரம் செய்தாா்.

Updated On :4 ஏப்ரல் 2021, 7:14 pm

அதிமுக ஆட்சியில் ஒசூரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட வாக்கு சேகரிப்பின்போது பிரசாரம் செய்தாா்.

ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் கட்டியது, ஒசூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தியது, ஒசூா், ராம்நாயக்கன் ஏரி வடக்குப் பகுதியில் இருவழிச் சாலையாக இருந்ததை நான்குவழிச் சாலையாக அமைத்தது, ஒசூா் இரு வழி உள்வட்டச் சாலையை நான்குவழி உள்வட்டச் சாலையாக அமைத்தது, ஒசூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவந்தது, டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தொடங்கி அதில் 20 ஆயிரம் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்தது என பல திட்டங்களை அதிமுகதான் கொண்டுவந்தது.

தற்போது தோ்தல் வாக்குறுதியாக மாதம்தோறும் ரூ. 1,500 மகளிருக்கு வழங்க அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சமையல் எரிவாயு உருளை இலவசம், கேபிள் இணைப்பு இலவசம் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றும். எனவே மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அவருடன் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்டப் பொருளாளா் நாராயணன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.