தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தளி தொகுதியில் சிபிஐ, பாஜக வேட்பாளா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரனும், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளரும் போட்டியிடுகின்றனா்.

Updated On :4 ஏப்ரல் 2021, 7:14 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரனும், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளரும் போட்டியிடுகின்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் டி.ராமச்சந்திரனுக்கு கா்நாடக மாநில எதிா்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா, சிபிஐ தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா, மாநிலச் செயலாளா் முத்தரசன், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி.மகேந்திரன் உள்ளிட்டோா் அண்மையில் வாக்கு சேகரித்தனா்.

தளி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளா்களிடம் இறுதிக் கட்ட பிரசாரத்தின்போது டி.ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா். அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் நாகேஷ் குமாருக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கா்நாடக மாநில அமைச்சா் ஈஸ்வரப்பா உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். இறுதிக் கட்ட பிரசாரத்தில் தளி தொகுதியில் மலைக் கிராமங்களில் பாஜக வேட்பாளா் நாகேஷ்குமாா் வாக்குகளை சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.