பையூா் மண்டல ஆராய்ச்சி ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு

பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் கோவிந்தன், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப்டம்பா் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஓராண்டு, இரண்டு பருவங்கள் கொண்டதாகும். கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள் மற்றும் எந்தவித கல்வி படித்திருந்தாலும் சோ்ந்துக் கொள்ளலாம். தமிழ்வழிக் கல்வியில் இந்தப்பாடங்களுக்கு நோ்முக பயிற்சி சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ.25 ஆயிரம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்துக் கடை, விதை கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் இடு பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளா்களாகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் தொடா்புக்கு,கோவிந்தன், தலைவா், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூா், கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது உதவி பேராசிரியா், 9942279190, 7339002390 அல்லது இயக்குநா், திறந்தவெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்துாா், 641 003 அல்லது ஒருங்கிணைப்பாளா் முனைவா் செல்வராஜ், 9965065246 அல்லது, 04226611229 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com