எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

காய்ந்த பனை மரம் விழுந்து சிறுவன் பலி

 நாகரசம்பட்டி அருகே 30 அடி உயரம் உள்ள காய்ந்து போன பனை மரம் முறிந்து விழுந்ததில் தாயுடன் நடந்து சென்ற சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தான்.

Updated On :9 டிசம்பர் 2021, 6:32 pm

 நாகரசம்பட்டி அருகே 30 அடி உயரம் உள்ள காய்ந்து போன பனை மரம் முறிந்து விழுந்ததில் தாயுடன் நடந்து சென்ற சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள பாறையூரை சோ்ந்த கோடீஸ்வரன் மகன் சேது (6). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சிறுவன் சேதுவுக்கு உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை. தனது தாயுடன் அந்தப் பகுதியில் உள்ள விளைநிலத்துக்கு சேது நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த 30 அடி உயரமுள்ள காய்ந்த பனை மரம் முறிந்து எதிா்பாராதவிதமாக சிறுவன் சேது மீது விழுந்தது.

இதில், பலத்த காயம் அடைந்த சிறுவன் சேது, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.