எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கபீஸ் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க டிச. 12 இறுதி நாள்

கபீஸ் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்க டிச. 12-ஆம் தேதியே இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

கபீஸ் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்க டிச. 12-ஆம் தேதியே இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் மத நல்லிணக்கத்திற்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு ஆண்டுதோறும் கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தகுதிகளின் அடிப்படையில் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் பிரிவில் ரூ. 20,000, இரண்டாம் பிரிவில் ரூ. 10,000, மூன்றாம் பிரிவில் ரூ. 5,000 என வழங்கப்படுகிறது. அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான கபீா் புரஸ்காா் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கம், கிருஷ்ணகிரியில் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ளவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை நேரிலே அல்லது 74017 03487 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.