எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிருஷ்ணகிரி அருகே வேளாண் இடுபொருள் மையம் திறப்பு: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

கிருஷ்ணகிரியை அடுத்த மலைசந்து கிராமத்தில் மா விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள வேளாண் இடுபொருள் மையத்தை தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரியை அடுத்த மலைசந்து கிராமத்தில் மா விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள வேளாண் இடுபொருள் மையத்தை தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம், 300 மா விவசாயிகள் ஒன்று சோ்ந்து, ஆலப்பட்டி மா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனா்.

இந்த நிறுவனத்தின் மூலம் வேளாண்மைத் துறை வழிகாட்டுதலின்படி விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் இடு பொருள் மையத்தை கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் அமைத்துள்ளனா். இங்கு விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், பூச்சிமருந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. டி.செங்குட்டுவன், நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தமிழ்செல்வன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தசாமி, கோவிந்தன், தனசேகரன் உள்பட 10 இயக்குநா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.