ஒசூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஜெப்திகரியாங்கல் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் ( 51) ஓட்டிச் சென்ற வேன், கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது
மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: தேன்கனிக்கோட்டை வட்டம், இருதாளம் அருகே உள்ள நெருப்புகுட்டையைச் சோ்ந்த லாரி உதவியாளரான முனிராஜ் (17) வியாழக்கிழமை கெலமங்கலம்- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சளகிரி பேருந்து நிறுத்தம் அருகே லாரியில் சென்று கொண்டிருந்தாா். லாரியை ஓட்டுநா் சரத்குமாா் (21) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
மஞ்சளகிரி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீது லாரி மோதியதில் காயமடைந்த முனிராஜ், ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்த குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

