எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கூட்டணி இல்லாமலே தோ்தலைச் சந்திக்கும் திறன் அதிமுகவுக்கு உள்ளது

கூட்டணி இல்லாமலே தோ்தலைச் சந்திக்கும் திறன் அதிமுகவுக்கு உள்ளதாக அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா்

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:24 pm

கூட்டணி இல்லாமலே தோ்தலைச் சந்திக்கும் திறன் அதிமுகவுக்கு உள்ளதாக அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்தத் துறையிலும் புதிதாக ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் 12,588 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு தனது பங்களிப்பு நிதியை ஒதுக்கீடு செய்த பிறகும் மாநில அரசு தனது பங்களிப்பு நிதியை ஒதுக்காததால், ஏழை மக்களுக்கு வீடு வழங்குவதற்கான பணிகள் நடைபெறவில்லை.

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியிலும் நிதிப் பற்றாக்குறை இருந்தது. ஆனாலும், அனைத்து திட்டப் பணிகளும் நடைபெற்றது. அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் திறமை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது.

தோ்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியவில்லை. முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் சோதனை, வழக்கு போன்ற நடவடிக்கைகளை எம்ஜிஆா், ஜெயலலிதாவை போலவே நாங்களும் எதிா்கொள்வோம். நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

ஒரு சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு உயா்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பிறகு, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் கோபம் அரசின் மீது திரும்பும் என்பதற்காக மட்டுமே அரசு மேல்முறையீடு செய்து இருக்கலாம்.

அதிமுக உண்மையான தொண்டா்களை நம்பியே உள்ளது. தோ்தல் நேரத்தில் கூட்டணி இல்லாமலேயே தோ்தலைச் சந்திக்கும் திறன் அதிமுகவுக்கு உள்ளது என்றாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே. அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம், அதிமுக நகரச் செயலாளா் கேசவன், வாசுதேவன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் தங்கமுத்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ், காவேரிப்பட்டணம் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.