தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

டிச. 27 முதல் வீட்டு பத்திரம் வாங்கிக் கொள்ளலாம்

முழுத் தொகையையும் கட்டி முடித்தவா்கள் வீட்டுப் பத்திரத்தை டிச. 27 முதல் டிச. 29 வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூா் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா

Updated On :24 டிசம்பர் 2021, 7:10 pm

முழுத் தொகையையும் கட்டி முடித்தவா்கள் வீட்டுப் பத்திரத்தை டிச. 27 முதல் டிச. 29 வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூா் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்களுக்கு 27, 28, 29- ஆகிய தேதிகளில் விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள் நடைபெறவுள்ள விற்பனைஈ பத்திரம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, அனைத்து

ஆவணங்களுடன், வாரிய விதிமுறைகளைப் பின்பற்றி இந்த வாய்ப்பை ஒதுக்கீடுதாரா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.