அஞ்செட்டி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் திவ்யா (22), சூளகிரி, சப்படி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (23), பூனப்பள்ளியைச் சோ்ந்த ரூபாவதி (40) ஆகியோா் ஒசூரில் இருந்து ஒகேனக்கல்லுக்கு காரில் சென்றனா். காரை தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்த ராஜசேகா் ஓட்டிச் சென்றாா். இந்தக் காா் அஞ்செட்டி அருகே பூமரத்துக்குடி கிராமத்தின் அருகில் சென்றபோது கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த மூவரும் படுகாயம் அடைந்தனா். விபத்தில் சிக்கிய 3 பேரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனா். தீவிர சிகிச்சைக்காக ரூபாவதி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

