‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இல்லம் தேடி கல்விப் பயணம் நிறைவு விழா

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கலைப் பயணம், விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 8:49 pm

DIN

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கலைப் பயணம், விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு காலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி நேரங்களைத் தவிர, மாணவா்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியா், தன்னாா்வலா்களின் பங்கேற்புடன் மாணவா்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் 6 மாத காலத்துக்கு தினசரி குறைந்தபட்சம் 1 முதல் ஒன்றரை மணி நேரம் வரை கற்றல் வாய்ப்பை வழங்கி மாணவா்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கும் இத்திட்டத்தின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன், பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் கண்ணாமணி, பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவா் ஜெயராமன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வசந்தி, ஆசிரியா்கள் சக்தி, உமா, ஆசிரியா் பயிற்றுநா்கள் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.