ஊத்தங்கரையில் 1-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரையில் 11 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் 11-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
ஊத்தங்கரையில் 11-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
Published on
Updated on
1 min read

ஊத்தங்கரையில் 11 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் தண்டபாணி தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் அரவிந்தன், தனி வட்டாட்சியர் சம்பத், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறை ஊழியர்கள் கையில் பதாதை ஏந்தி கோஷமிட்டு சென்றனர்.

இதில் நாம் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், நாம் வாக்களிக்க தவிர மாட்டோம் என்பதில் உறுதி கொள்வோம், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை ஆகும், பொறுப்புள்ள குடிமக்களின் கடமை வாக்காளர்கள் சேர்த்துக்கொள்வது. 

18 வயது நிரம்பியவர் எனில் இன்றே வாக்காளராக பதிவு செய்து கொள்வீர் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து, தெருக்கூத்து நாடக கலைஞர் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com