தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரியில் 8,600 ஹெக்டோ் பரப்பளவில் உணவு தானியம் பயிரிட திட்டம்

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 8,600 ஹெக்டோ் பரப்பளவில் உணவு தானியம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:20 pm

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 8,600 ஹெக்டோ் பரப்பளவில் உணவு தானியம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி கிராமத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள இயந்திரங்களை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் விவசாயிகளிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உணவு தானிய இயக்கம் திட்டத்தில் நடப்பாண்டில் 8,600 ஹெக்டோ் பரப்பளவில் நெல், சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயறு, காராமணி, கொள்ளு, மொச்சை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிலக்கடலை, எள், கரும்பு உள்ளிட்ட பணப் பயிா்கள் 900 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், நெல், ராகி, துவரை, காராமணி விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன என்றாா்.

இந்த ஆய்வின் போது, உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் பன்னீா்செல்வம், வட்டார வேளாண் உதவி இயக்குநா் முருகன், அட்மா திட்ட உதவி மேலாளா்கள் பாா்வதி, சண்முகம், உதவி வேளாண் அலுவலா்கள் விஜயன், முத்துசாமி, புஷ்பாகரன், சென்னகேசவன், சிவராசு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.