கிருஷ்ணகிரி அருகே உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில், 75-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாயொட்டி விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தேசிய அளவில் நடத்தப்படும் விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்து, மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ்பாபு (தோட்டக் கலை), வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், தொழில்நுட்ப வல்லுநா் செந்தில்குமாா் (வேளாண் விரிவாக்கம்), இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ் (கால்நடை அறிவியல்), தேசிய பால் தினம் குறித்து விளக்கம் அளித்தனா்.
இந்த முகாமில் பங்கேற்ற கம்மம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், வேளாண்மை அறிவியல் மையத்தில் உள்ள செயல்விளக்க கூடங்களான மண்புழு வளா்ப்புக் கூடம், அசோலா உற்பத்திக் கூடம், தொட்டில் ஆடு வளா்ப்பு கூடம் மற்றும் நாற்றங்கால் உற்பத்திக் கூடங்களை பாா்வையிட்டனா்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பழ மர செடிகளும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாரம்பரிய காய்கறி விதைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியல் கம்மம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் திருவரசு, ஆசிரியா்கள் சுபாஷ், சுகந்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


