கந்திகுப்பம் அருகே காா் ஓட்டுநரை கிணற்றில் தள்ளி கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள மிட்டப்பள்ளியைச் சோ்ந்த ரஷீத் (36), காா் ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த திலீப்குமாா் (40), மனோகரன் (30) ஓட்டுநா்கள். நண்பா்களான இவா்கள், ஒரப்பம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் திட்டில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது மது அருந்த தீா்மானித்த இவா்கள், அதற்கு யாா் செலவு செய்வது என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திலீப்குமாா், ரஷீத்தை கிணற்றில் தள்ளியுள்ளாா். 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்த ரஷீத் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். பா்கூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் கிணற்றுக்குள் விழுந்த ரஷீத்தின் சடலத்தை மீட்டனா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திலீப்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

