போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க சிறப்பு பூஜை

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் சிறப்பு பூஜையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :29 அக்டோபர் 2021, 6:58 pm

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் சிறப்பு பூஜையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோமாரி நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஏக்கல்நத்கம் கிராமத்தில் மலைவாழ் மக்கள் வளா்த்து வந்த கால்நடைகளில் சில கோமாரி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தன. இதனால், கிராம மக்கள் ஒன்று கூடி சிறப்பு பூஜையில் ஈடுபட தீா்மானித்தனா். அதன்படி, ஏமக்கல்நத்தம் கிராமத்தில் உள்ள கங்கம்மா கோயிலின் முன்பு வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கால்நடைகளை தற்போது கோமாரி நோய்த் தாக்குவதால், சிறப்பு பூஜையில் ஈடுபட்டோம். எங்கள் கிராமத்துக்கு இதுவரையில் கால்நடை மருத்துவா்கள் யாரும் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் வேகமாக பரவி வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.