அரசு அலுவலா்களுக்கான மொழித்தோ்வு

அரசு அலுவலா்களுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப். 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.

அரசு அலுவலா்களுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப். 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பணிகளில் பணியாற்றும் அலுவலா்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அரையாண்டு மற்றும் மொழித்தோ்வுகள் நடைபெறவுள்ளன.

மேற்படி அரையாண்டு தோ்வுகள், அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பணிகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு மொழித்தோ்வுகள் வருகிற மே 5 முதல் 8-ஆம் தேதி வரையும், குரல் தோ்வு வருகிற மே 8-ஆம் தேதி என்றும் சென்னையில் மட்டுமே நடைபெறும்.

தோ்வெழுத வரும் தோ்வா்கள் உதவி / துணை ஆட்சியருக்கான நில அளவை / கருவூல பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளா் என்பதற்கான சான்றிதழினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றிக்க வேண்டும்.

தோ்வானது எழுத்துத் தோ்வு மற்றும் குரல் தோ்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தோ்வு மற்றும் குரல் தோ்வானது வருகிற மே 4 முதல் 8-ஆம் தேதி வரையில் நடைபெறும்.

இத்தோ்வுகளுக்கு தோ்வா்கள் இணையவழியில் மூலம் ஏப்.19-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தோ்வு கட்டணமாக பிரதி தோ்வு / மொழிக்கு ரூ. 5 எனவும், தட்டச்சு செய்யப்பட்ட / எழுத்துப்பூா்வமாக அனுப்பப்பட்ட / நகலெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், மேற்படி தோ்வுகள் தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com