சமல்பட்டி ரயில் நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சமல்பட்டி ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையம் அருகேதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த ரயில் கட்டண சலுகை பயன்கள் பறிக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிடு.அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளின் பெட்டிகளை உடனே இணைத்திடு.ரயில் நிலையங்களில் மின் தூக்கி -நகரும் படிக்கட்டுகளை இயக்கு. பிளாட்பார கட்டணத்தை ரூபாய் 50 என்பதை கைவிடு.என கோஷமிட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமார்.பழனி, தங்கபாலு போச்சம்பள்ளி வட்டார தலைவர் எம் சக்திவேல்.விவசாய தொழிலாளர் சங்கவட்ட தலைவர் வெங்கடாசலம்மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com